ஐப்பசி மாத கிருத்திகை விரத தினத்தை ஒட்டி முருகன் கோவில் அனைத்திலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருத்தணி முருகன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்சவர் முருகர் வள்ளி தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்....