சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி கோவிலில் நடைசாற்றப்படும்: கோவில் அறிவிப்பு

04 January 2026

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, மார்ச் 3-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சுமார் 10.5 மணி நேரம் சாத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



மார்ச் 3 அன்று மாலை 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை சந்திர கிரகணம் நிகழும்.


கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே நடை சாத்தப்படும் முறைப்படி, அன்று காலை 9:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும்.

கிரகணம் முடிந்து சுத்திகரிப்பு சடங்குகள் முடிந்த பிறகு, இரவு 8:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது...