முகப்பு திருக்கோவிலூர் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் அதிகார மோதலால் மன உளைச்சலில் பள்ளி ஆசிரியர்கள்
திருக்கோவிலூர் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் அதிகார மோதலால் மன உளைச்சலில் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை..கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருந்து வருகிறது, இந்தப் பள்ளியில் சுமார் 2000 மாணவிகள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்,2000 மாணவர்கள் மற்றும் 80 ஆசிரியர்கள் பணியாளர்கள் என அனைவருக்கும் மொத்தமாக இரண்டு கழிவறை கட்டிடம் மட்டுமே உள்ளது, அனைவரும் இந்த கழிவறையை பயன்படுத்துவதால் ஐந்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு யூரின் இன்பெக்சன் என்று சொல்லக்கூடிய நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை செல்வதற்கு கூட ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் கூட அவர்களை அநாகரிமாக பேசுவது போன்ற நடவடிக்கை
களில் ஈடுபடுவதாகவும் ஆசிரியர்கள் வைக்கும் கோரிக்கையை காது கொடுத்து கேட்காமல் ஒருமையில் பேசுவதாகவும் மதிய உணவு சாப்பிடுவதற்கு அதே பகுதியில் வசிக்கும் ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்காமல் பள்ளியில் தான் சாப்பிட வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகள் கடுமையாக விதிப்பதாலும் வயது முதிர்ந்த ஆசிரியர்கள் பள்ளி மாடியில் தான் உணவு அருந்த வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் விதித்து வருவதால்
கடும் மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு முறையான பாடத்தை கற்பிக்க முடியாமல் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் தினந்தோறும் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது, ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே பள்ளி மாணவிகளுக்கு முறையான கல்வியை கற்றுத் தர முடியும் ஆசிரியர்களே மன உளைச்சலில் இருந்தால் எப்படி பள்ளி மாணவிகள் கல்வியை கற்க முடியும் என்ற நிலைக்கு தலைமை ஆசிரியர் கொண்டு செல்வதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனடியாக பள்ளியை ஆய்வு செய்து நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது,
இல்லையென்றால் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் விடுக்கப்படும் கோரிக்கையாகும்....
--PS Parthi