கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் முழுநேர கிளை நூலகத்தில் சனிக்கிழமை தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு வாசகர் வட்ட குழு தலைவர் சிங்கார உதயன் தலைமை வகித்தார். நூலக கொடையாளர்கள் குணா ஜி டி ஆர் தியாகராஜன் தொழிற்சங்க தலைவர் சரவணன் நல்நூலகர் தனுஷ் ஆகியோரும் முன்னிலை வகித்தனர். நூலகர் ரா வசந்தி வரவேற்றார். திருக்கோவிலூர் நகர் மன்ற தலைவர் டிஎன் முருகன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தும் இவ்வாண்டு நல்நூலகர் எஸ் ஆர் அரங்கநாதன் விருது பெற்ற தோரவி கிளை நூலக நூலாக்கர் எம் தர்மனுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்புரையாற்றினார்.
இந்த நூலகத்தினால் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கான ஒரு ஒரு நூலாகமாக அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் நூற்றுக்கணக்கான வேலை தேடும் இளைஞர்கள் படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றும் பல அரசு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நகர்மன்றத் துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா நூலக புறவலர்களுக்கு பட்டையும் வழங்கி பாராட்டி பேசினார். இவ்விழாவில் ஊதிய மைய நூலகர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக பணியாளர்கள் எஸ் சம்பத் எஸ் தேவி ஆகியோர் செய்திருந்தனர்..
---PS Parthi