திருச்செந்தூரில் கோவிலுக்குள் புகுந்த மழைநீர்

09 November 2025

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக கன மழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் திருச்செந்தூர் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டுகள் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக திருச்செந்தூர் சிவன் கோவிலில் மழை நீர் புகுந்ததால் கோவில் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டது. இதனைத் தொடர்ந்து மின் மோட்டார் மூலம் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது. இதே போன்ற பல்வேறு இடங்களிலும் மழை நீர் சாலையில் தேங்கி பெருக்கெடுத்து ஓடியது.