மேற்கு வங்கத் தேர்தல்: 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்

17 March 2026

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 291 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தனது அரசியல் கோட்டையாகக் கருதப்படும் பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் பா.ஜ.க. சார்பில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி களம் இறங்குகிறார்.
கடந்த 2021 தேர்தலைப் போலவே இந்த முறையும் மம்தா பானர்ஜி மற்றும் சுவேந்து அதிகாரி இடையேயான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் மார்ச் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 4-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் மம்தா பானர்ஜி இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.