மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
இதனை ஒட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் புத்தாண்டு தினம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இருப்ப இருப்பினும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்...
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்...