திருவண்ணாமலை கிரிவலத்தில் நூதன முறையில் மக்களை ஏமாற்றும் கும்பல்!

05 December 2025

திருவண்ணாமலை கிரிவலத்தில் புதுவிதமான நூதன முறையில் மக்களை ஏமாற்றும் சில கும்பல் இருக்கிறது. 

திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது. இதில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு மாதமும் இந்த கிரிவலத்தில் 14 கிலோமீட்டர் நடை பயணம் செல்கிறார்கள். இப்படி தமிழ்நாட்டும் மக்கள் மட்டுமல்லாமல்  வெளி மாநிலத்து மக்களும் அதிக அளவில் இங்கே வந்து சிவனை வேண்டுகிறார்கள். 
கிரிவலம் நடப்பதில் பல இடங்களில் அன்னதானப் போடுவது உண்டு அப்படி இருக்கையில் சில கும்பல் கிரிவலம் செல்லும் பாதையில் நடு வழியில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில்  நடந்து செல்ல நபருக்கு மோர் கொடுக்கிறார்கள். இலவசம் என்று குடித்துவிட்டு செல்லும்போது இது இலவசமல்ல இதற்கு பத்து ரூபாய் பணம் என்று சொல்லி பின்னரே சென்று மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இப்படி பல அப்பாவி பொதுமக்கள் இங்கு பாதிக்கப்படுகிறார்கள். 
இது நேற்று இன்று அல்ல ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் இது போல் நூதன முறையில் நடக்கிறது இதை ஏன் பேரூராட்சியும் காவல் துறையும் கண்டு கொள்ளவில்லை என்று தெரியவில்லை. இலவசம் என்ற பெயரில்  பொதுமக்கள் குடிநீரை வாங்கி அருந்துகிறார்கள் ஆனால் அது பணம் என்று நினைத்தவுடன் அவர்கள் மனம் உடைந்து போகிறார்கள். மக்கள்  வருவதோ ஈசனை பார்ப்பதற்காக ஆனால் பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு அவர்கள் செய்யும் செயலால் பல பொதுமக்கள் மன வேதனைக்கு ஆளாகிறார்கள். அனைவரும் வெளி மாநிலத்திலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் வருகிறார்கள் என்ன என்று சொல்வது தெரியாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். 
இவர்களை காவல்துறைகளும் மாநகராட்சி ஊழியர்களும் இவர்களை இது போல் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். 
இத்தனை நாட்களாக கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது இதுபோல் சில கும்பல்கள் அங்கங்கே நின்று கொண்டு செய்யும் பொழுது பொது மக்கள் மன வேதனையோடு செல்கிறார்கள்..
இந்த நபர்களை பேரூராட்சி ஊழியர்களும் காவல்துறைகளும் கவனித்து தண்டிக்கப்படுவார்களா என்ற சூழல் மக்கள் இடையே தோன்றுகிறது. இதனால் நல்ல மனதுடன்  அன்னதானம் கொடுக்கும் நபர்களிடமும்  உணவை வாங்குவதற்கு பலர் அச்சப்படுகிறார்கள்...
இதுபோல சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும் இவர்களை தண்டிக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

---PS Parthi