திருவண்ணாமலை திருத்தலத்தில் மிகவும் முக்கியமான வழிபாடாக கருதப்படுவது கிரிவல வழிபாடாகும். திருவண்ணாமலையில் வருடத்தின் அனைத்து நாட்களும், எந்த நேரமும் கிரிவலம் சென்றாலும் பலன் கிடைக்கும் என்றாலும், மிகவும் பிரபலமானதாக சொல்லப்படுவது பவுர்ணமி கிரிவல வழிபாடு தான். மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் கிரிவலம்செல்வதற்கு ஏற்ற நல்ல நேரத்தை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகமே வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கார்த்திகை தீபம் 3 தேதியும் மறுநாள் 4 தேதி புதன்கிழமை பவுர்ணமி வருகிறது.
டிசம்பர் 04ம் தேதி இரவு 09.43 மணி துவங்கி, டிசம்பர் 05ம் தேதி இரவு 07.27 வரை பவுர்ணமி திதி உள்ளது. இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் வருவது சிறப்பானதாகும்....
---PS Parthi