திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு டிசம்பர் 3ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை ஒட்டி அப்பகுதியில் மற்றும் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று காவல் அதிகாரிகள் கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வேலூர் சரக டிஐஜி தர்மராஜன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் தீபம் ஏற்றும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்...