திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூரில் கார்த்திகை தீப திருவிழா நாளில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..
இந்த நிலையில் பெரும் சர்ச்சையுடனே நடந்து வரும் இந்த வழக்கில் தொடர்ந்து தமிழக அரசு தீபம் ஏற்ற முடியாது என தெரிவித்து வரும் நிலையில் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பாதுகாப்புடன் அங்கு தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதன் பெயரில் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது.
மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது...