திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூரில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூரில் தீபம் ஏற்றப்படவில்லை அதற்கு மாறாக உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது இதனால் நீதிமன்ற உத்தரவை இந்து சமய அறநிலை தறையின் கீழ் இயங்கும் கோவில் நிர்வாகம் அவமதித்துள்ளதாக மதுரை கிளை எச்சரித்தது. இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை இன்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற போது மனுதாரர் சி ஆர் பி எப் வீரர்கள் பாதுகாப்புடன் சென்று மலை உச்சியில் உள்ள தீபத்தூரில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் கோவில் மாலையில் ஏற போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் அங்கு 144 தடை உத்தரவு இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.