திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு தனி நீதிபதி விசாரணைக்கு தடை இல்லை

16 December 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட அதன்படி இதற்காக தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை கோவில் நிர்வாகம் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்கு வந்தது. 

இந்த விசாரணையில் வக்பு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முபின் தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தூண் அமைந்துள்ளதால் கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் தீபத்துவம் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் சமரச தேர்வுக்கு தயார் என தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விகாஸ்சிங் வாதாடிய போது மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மட்டுமே கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பிய மனதில் ராம ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார் அவர் கோரிய நிவாரணத்தை தாண்டி தனி நீதிபதி தீபத்தூரில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்தார். 

இந்த விவகாரத்தில் கோவில் தர்கா தரப்பு பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிடலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது பேச்சு வார்த்தை விவகாரத்தில் தீர்வு கிடைப்பதை தாமதப்படுத்தும் என மனுதாரர் தரப்பு பதில் அளித்தது. மார்கழி மாதம் பிறந்து விட்டதால் கார்த்திக்கு இன்னும் 360 க்கும் மேலான நாட்கள் உள்ளதால் தொடர்ந்து வழக்கின் விசாரணையை நாளை நீதிபதிகள் ஒத்தி வத்தனர்
. மேலும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான தனி நீதிபதி விசாரணைக்கு தடை இல்லை என்றும் தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.