திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம் தொடர்ந்து பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
இதனிடையே இது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது எனவே அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் என வாதாடப்பட்டது.
அதற்கு இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க கோவில் செயல் அலுவலர் வீடியோ காணொளி மூலம் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்ததாக தெரிவித்த நீதிபதி இதுவரை அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும் இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உடனடியாக அவர் காணொளியில் ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்ததன் பேரல்
போலீஸ் கமிஷனர் லோகநாதன் சற்று நேரத்தில் கரையை நீதிபதி முன்பு காணொளியில் ஆஜரானார்.
அப்போது அவரிடம் நீதிபதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர் ஆனால் அவர்களை அனுமதிக்க மறுத்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த போலீஸ் கமிஷனர் திருப்பரங்குன்றம் மலையை சுற்றிலும் பகலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தோம். அதே நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்ததால் மாவட்ட கலெக்டர் அந்த உத்தரவை அனுப்பி இருந்தார் என்றும் அதை அமல்படுத்தும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தவிர்க்கும் வகையிலும் யாரையும் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.