சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தல ரூபாய் 50,000 நிதி உதவி அளிக்க உள்ளதாக தெரிவித்தார் மேலும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். மேலும் விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்பட போகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தொல் திருமாவளவன் அதிமுக தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி என தெரிவித்தார். மேலும் அப்படி கூட்டணி அமைந்தால் பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அப்படி பாஜகவை கழட்டி விட்டால் அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகும் என அவர் தெரிவித்தார்.