திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருச்சி சமயபுரம் அருகே கடந்த மாதம் 9.9 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருச்சியில் கடந்த 13 ஆம் தேதி சமயபுரம் அருகே நகைக்கடை ஊழியர்கள் காரில் நகைகளை எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது காரை மறித்து மிளகாய் பொடி தூவி அவர்கள் வைத்திருந்த 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக சமயபுரம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த விசாரணையில் கார் டிரைவர் பிரதீப், அவருடைய நண்பர்கள் அனுமன் ராம், கைலாஷ், வினோத், பன்ணாராம், முகமது சுஹைல், மனோகர்ராம், மணிஸ் சிரோகி, மங்கிலால் கனாராம் மற்றும் விக்ரம் ராமு ஆகிய அனைவரும் கூட்டாக சேர்ந்து இந்த நகைகளை கொள்ளை அடித்தது தெரியவந்தது. இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் தமிழக போலீசார் மத்திய பிரதேச போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 9.689 கிலோ நகை மற்றும் 6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ் பி செல்வ நாகரத்தினம் தெரிவித்தார்.