தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை...

20 November 2025

தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை...
 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வைபாளையம் கிராம மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்காமல் அலைகழித்து வரும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்...


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உடையானந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட வைப்பாளையம் கிராம மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி நிர்வாகம் கடந்த ஒரு வருடமாக புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது உள்ளாட்சித் தேர்தலில் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாக்களிக்கவில்லை என்ற காரணத்தினால் பணிகள் வழங்காமல் வைப்பாளையம் கிராம மக்களை ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாகவும் அதனால் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பலமுறை அரசு உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து வைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட அடையாள அட்டையை எடுத்து வந்து திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் ஊராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரும் வைப்பாளையம் கிராம மக்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள்வலியுறுத்தினர். வை பாளையம் கிராம மக்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது...


இரா.வெங்கடேசன், சப்எடிட்டர் கொற்றவை நியூஸ்