உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ம.குன்னத்தூரில் கார்த்திகை பஞ்சமி தீர்த்த நீராடல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது...
25 November 2025
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ம.குன்னத்தூரில் கார்த்திகை பஞ்சமி தீர்த்த நீராடல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது...
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், ம.குன்னத்தூர் கிராமத்தில் ஸ்ரீ அலமேலு மங்கை சமேத
ஸ்ரீனிவாசபெருமாள் ஆலய 25ம் ஆண்டு கார்த்திகை பஞ்சமி தீர்த்த நீராடல் உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாதத்தில் பஞ்சமி திதி அன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் பஞ்சமி திதி நீராடல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும், இதற்கு அடுத்தபடியாக இக்கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் ஸ்ரீஅலமேலுமங்கை
சமேத, ஸ்ரீனிவாசப் பெருமாள் புஷ்ப அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ சக்கரத்தாழ்வார், திருக்கோவிலில் இருந்து பஜனை பாடல்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு மெயின் ரோட்டிற்கு வலது புறம் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் குளத்தில் தீர்த்தவாரி உற்சவத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் புனித நீராடல் வைபவம் நடைபெற்றது. விழாவில்
இப்பகுதியிலுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு குளத்தில் புனித நீராடினர். விழாவில் ஏராளமானோர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தைகளுக்கு (துலாபாரம்) எடைக்கு எடை பணம் செலுத்தினர். மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும்
காலை முதல் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது...
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர்
கொற்றவை நியூஸ்