மகளிர் திட்டத்தின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்ட மதி அங்காடியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்...
29 November 2025
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் கிராமத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்ட மதி அங்காடியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திறந்து வைத்தார்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் கிராமத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் தயார் செய்த கைவினைப் பொருட்கள் விற்கப்படும் மதி அங்காடி அமைக்கப்பட்டது இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டு மதி அங்காடியை திறந்து வைத்தார் இதில் அரசு அதிகாரிகள் மகளிர் சுய உதவி குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்...
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்