உலகப் புகழ்பெற்ற கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

08 December 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான திருநங்கைகளின் குலதெய்வமாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரசையாக நடைபெற்றது....



கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமாக வழிபட்டு வரும் உலகப் புகழ்பெற்ற  நூற்றாண்டுகள் பழமையான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சனிக்கிழமை காலை கணபதி ஹோமம் நடைபெற்றது இதைத்தொடர்ந்து அன்று மாலை அனுக்ஜை அங்குரார்பணம் வாஸ்து சாந்தி மகாபூர்ணாகுதி பூஜைகள் செய்யப்பட்டது இதைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  யாகசாலை பூஜைகள் நடைபெற்றது அப்பொழுது புனித நீர் அடங்கிய கலசங்களை யாகசாலையில் வைத்து பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தினர் இதைத்தொடர்ந்து இன்று காலை மகா ஹோமம் நடைபெற்ற பின்பு கடம் புறப்பாடு நடைபெற்றது அப்பொழுது யாகசாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்களுடன் கொண்டுவந்து கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது அப்பொழுது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு கூத்தாண்டவரை வழிபட்டனர் இதைத்தொடர்ந்து மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மகா தீபாரதரையும் நடைபெற்றது இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த்குமார்சிங் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கணன் மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கூவாகம் தொட்டி நத்தம் கீழ்குப்பம் வேலூர் உளுந்தூர்பேட்டை பண்ருட்டி விழுப்புரம் திருக்கோவிலூர் திருவெண்ணைநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து அரசு அதிகாரிகள்  திருநங்கைகள் கொண்டனர். கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் உளுந்தூர்பேட்டை துணை கண்காணிப்பாளர் அசோகன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மேலும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது...

இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்