உளுந்தூர்பேட்டையில் சுமார் ரூ.2,302 கோடி முதலீட்டில் துவங்கவுள்ள பெள- சென் காலணி தொழிற்சாலை பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்...
26 December 2025
உளுந்தூர்பேட்டையில் சுமார் ரூ.2,302 கோடி முதலீட்டில் துவங்கவுள்ள பெள- சென் காலணி தொழிற்சாலை பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்...
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற் பூங்காவில் சுமார் ரூ.2,302 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் பெள- சென் (Pou Chen) காலணி (தோல் இல்லா காலணி) உற்பத்திக்கான புதிய தொழிற்சாலை செயல்பட உள்ளது. இந்த புதிய காலணி தொழிற்சாலை செயல்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு அந்நிறுவன பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அருகில் பெள சென் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ்லீயு,
தொழில் துறை அமைச்சர் அமைச்சர் டிஆர்பி.ராஜா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன்,
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ.மணிக்கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பெள-சென் நிறுவனத்தினர் திரளாக கலந்து கொண்டனர்...
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்