178 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்..

21 November 2025

178 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்..


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. மணிக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு 178 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. டேனியல்ராஜ் உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் திரு. திருநாவுக்கரசு, பள்ளியின் தலைமை ஆசிரியை லட்சுமி கார்த்தியாயினி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்...

இரா.வெங்கடேசன்,  சப்எடிட்டர்- கொற்றவை நியூஸ்