உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் 18ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
01 August 2025
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் 18ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் 18ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது இந்த விழாவில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செய்தனர் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் வேண்டியும் நடைபெற்ற இந்த முளைப்பாரி திருவிழாவில் கலந்து கொண்ட பெண்கள் அங்கு வீடுகளில் இருந்து எடுத்து வந்த பொருட்களைக் கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்
ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் சாரதாஅம்மா தானியங்களால் ஆன ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்து தனதானியலட்சுமியாக காட்சியளித்த சாரதா அம்பாளை பெண்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்...
சப் எடிட்டர்... இரா.வெங்கடேசன்