விபரீதத்தில் முடிந்த முறை தவறிய உறவு

01 December 2025

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கோவிந்தா புரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார்(வயது 44) இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 38) கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கியிருந்து 

அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர் இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகன் உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தனகுமாரின் உறவினரான ஒட்டன்சத்திரம் சாலைப்புதூரைச் சேர்ந்த காளிமுத்து 29 என்பவர் பணிய நிறுவனத்துக்கு வேலை க்காக திருப்பூர் வந்தார் உறவினர் என்பதால் தனது வீட்டில் தங்கு வதற்கு அவர் அனுமதித்தார் இதனை அடுத்து காளிமுத்துவும் அவர் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார் சந்தனகுமார் காளிமுத்துவுக்கு மாமா உறவு முறை ஆவார்.

ஒரே வீட்டில் வசித்ததால் காளி முத்துவுக்கும் சந்தனகுமாரின் மனைவி ஜெயலட்சுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது இது குறித்து அறிந்த சந்தனகுமார் தனது மனைவி மற்றும் காளி முத்துவை கண்டித்தார் ஆனால் அதை அவர்கள் கண்டு கொள் ளாமல் கள்ளக்காதலை தொடர்ந் தனர் 

இந்த நிலையில் கடந்த 4. மாதங் களுக்கு முன்பு சந்தனகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.எனினும் காளிமுத்து சந்தன குமாரின் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார் இதனி டையே இவர்களின் கள்ளக்காதல் பற்றி அறிந்த காளிமுத்துவின் குடும்பத்தினர் 

அவர்கள் ரெண்டு பேரையும் கண்டி த்துள்ளனர் இதனால் ஜெயலட்சுமி காளிமுத்து இருவரும் மனம் உடை ந்தனர் பின்பு இரண்டு பேரும் தற் கொலை செய்து கொள்ள முடி வெடுத்தனர் அதன்படி ஜெய லட்சுமி காளிமுத்து ஆகியோர் நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் வந்து பின்பு அரங்கநாதபுரத்தில் உள்ள ரயில் தண்டவாளத்துக்கு சென்றனர்

அப்போது அங்கே கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரைக்குச் சென்ற ரயில் முன் இரண்டு பேரும் பாய்ந்தனர் இதில் அவர்கள் ரெண்டு பேரும் உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தனர் இது குறித்து தகவல் அறிந்த பழனி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் அவர்கள் இறந்து கிடந்த ரெண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

அத்தையுடனான முறை தவறிய உறவால் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்