தஞ்சை மது கடையை அகற்ற கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்.

08 September 2025

தஞ்சை தெற்கு மாவட்டம் SDPI-கட்சியின் சேதுபாவாசத்திரம் கிளைக்கு உட்பட்ட பகுதியில் மது கடையை அகற்ற கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்... 

பேராவூரணி சட்டமன்ற தொகுதி, சேதுபாவாசத்திரம் கிளை மற்றும் ஜமாத்தார்கள் சார்பாக பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் மது கடையை அகற்ற கோரி இன்று (05-09-2025) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை முடிந்தவுடன் கிளை தலைவர் S.கலீல் அவர்கள்  தலைமையில் பொது மக்களிடம் மது கடையை அகற்ற கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் ஜமாத்தார்கள், கட்சி கிளை செயலாளர் முன்னிலை வகித்தனர். கட்சியின் கிளை செயல்வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்