மருமகனை குத்திக்கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை

07 November 2025

திருப்பூர் மாவட்டம். வெள்ளக்கோவில் அருகே உள்ள அய்யம்பாளையம் குமார வலசு கிராமத்தை சேர்ந்தவர் சூரியா வயது (50) இவர் வெள்ளக்கோவில் பஸ்நிலையம் அருகே பூக்கடை நடத்தி வருகிறார். 


வெள்ளக்கோவில் மோனகவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் வயது (31) இவர் திருமணம் அகி குடும்பபிரச்சனையால் மனைவியை பிரிந்து வாழ்கிறார் இவர் பூவியாபாரி சூரியாவின் மகளை சினேகா(25)என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தி குடும்பம் நடத்தி வந்தார் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன மேலும் ராஜசேகர் சினேகா இருவருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது 


ஏற்கனவே தன்மகளை ஏமாற்றி திருமணம் செய்ததால் சூரியா, ராஜசேகர் மேல் கோபமாக இருந்துள்ளார்.இந்த நிலையில் ராஜசேகர் நடத்தி வரும் பூக்கடை யில்"பங்கு கேட்டு ராஜசேகர் சூரியாவிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார் இதனால் கடும் கோபத்தில் இருந்துள்ளார் சூரியா 


இந்நிலையில் கடந்த 2020.ம் ஆண்டு பிப்ரவரி வரி 16.ம் தேதி அன்று மாமனார் சூரியாவுக்கும் மருமகன் ராஜேசேகருக்கும் கடை சம்பந்தமாக மீண்டும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது வாக்குவாதம் முற்றியதில் மாமனார் சூரியா தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் மருமகன் ராஜசேகரின் தலையில் குத்தினார் இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜசேகரைஅக்கம் பக்கத்தினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்.ராஜசேகர் ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்த 


புகாரின் பேரில் வெள்ளகோவில் போலிசார் வழக்கு பதிவு செய்து சூரியாவை கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு விசாரணை தாராபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி சரவணன் 5-11-2025.அன்று தீர்ப்பு வழங்கினார் அப்போது
குற்றம் சாட்டப்பட்ட சூரியாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 5.ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார் இந்த வழக்கில் அரசு வக்கில் மணிவண்ணன் ஆஜராகியிருந்தார் இதற்கிடையே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சூரியாவை கோவை மத்திய சிறையில் போலிசார் அடைத்தனர்


செய்தியாளர்
மா.ஜாபர் அலி திருப்பூர்.