தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம்
11 February 2026
தாய்லாந்து நாட்டின் சாங்லா மாகாணம், ஹட் யய் மாவட்டத்தில் உள்ள படோங் கிராமப் பள்ளியில் இன்று மாலை புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த கோரமான தாக்குதலில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், பள்ளி வளாகத்திற்குள் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் அந்த இளைஞர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரைச் சுட்டுப் பிடித்துக் கைது செய்தனர். மேலும், அவரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.