தாய்லாந்து கம்போடியா இடையே தொடரும் போர்

14 December 2025

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் நடந்த போரில் 48 பேர் உயிரிழந்தனர். 

இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் தாய்லாந்து கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டிராட் மாகாணத்தில் நேற்று இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது...