தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனவரி ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.