முகப்பு இந்தியாவை 201க்கு சுருட்டி.. ஃபாலோ ஆன் ஆனது இந்தியா, ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிசை தொடங்கியது SA
இந்தியா மற்றும் இ தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் விளையாடி 489 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதத்தை அடித்து 109, மார்கோ யான்சென் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு 65 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்ததும் 58 ரன்னில் சைமன் ஹார்மர் சுழலில் சிக்கினார். மறுபுறம் தடுமாறிய சாய் சுதர்சன் 15 ரன்னில் அவுட்டாக துருவ் ஜுரேல் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
இந்தியா சொதப்பல்:
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் குருட்டுத்தனமாக இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயற்சித்து 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். போதாகுறைக்கு அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 6, நிதிஷ் ரெட்டி 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். அதனால் 122/7 என சரிந்த இந்தியா 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நங்கூரமாக விளையாடினார். அவருடன் சேர்ந்த குல்தீப் யாதவ் இரு மடங்கு நங்கூரமாக விளையாடி கை கொடுத்தார். அதைப் பயன்படுத்திய சுந்தர் 8வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதத்தை நெருங்கிய போது 48 ரன்னில் ஹார்மர் சுழலில் விக்கெட்டை இழந்தார்.
ஃபாலோ ஆன் சோகம்:
மறுபுறம் 134 பந்துகளை எதிர்கொண்டு மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் அபாரமாக விளையாடிய குல்தீப் யாதவ் போராடி 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் பும்ரா 5, சிராஜ் 2* ரன்கள் எடுத்தும் இந்தியாவை 201 ரன்களுக்கு சுருட்டிய தெனாப்பிரிக்கா 288 ரன்களை முன்னிலையாகப் பெற்று அசத்தியது. அதனால் ஃபாலோ ஆன் கொடுப்பதற்கான உரிமையைப் பெற்ற அந்த அணி அதை இந்தியாவுக்கு கொடுக்காமல் மீண்டும் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இந்தியா சீட்டிங் பண்ணிட்டாங்கன்னு கை காட்டுவதை நிறுத்துங்க.. ஆஸி, இங்கிலாந்தினரை விளாசிய கவாஸ்கர், இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிக ரன்களை முன்னிலை பெற்றும் ஃபாலோ ஆன் கொடுக்காத வெளிநாட்டு அணி என்ற பெருமையை தெனாப்பிரிக்கா பெற்றுள்ளது. இதற்கு முன் இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 2017 ஹைதராபாத் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தான் அதிகபட்சமாக 299 ரன்கள் எடுத்தும் ஃபாலோ ஆன் கொடுக்கவில்லை. அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 6, சைமன் ஹார்மர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா மீண்டும் பேட்டிங் செய்கிறது.
--PS Parthi