கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் இன்று (25.10.2025)பக்தர்கள் முருகன், மூலவர், காலபைரவர், அம்பாள் சன்னதிகளில் ஆராதனை செய்து வழிபாடு செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு மலர் மாலை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டு, விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் முருகன் கோவிலில் கந்த சஷ்டி நான்காம் நாள் வழிபாடு நடைபெற்றது.