மரக்கிளைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

05 December 2025

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள,பாகம் என் ௧௩௪ பாரதியார் தெரு வடிவேல் நகர் தெருவில் உள்ள மின்கம்பத்தில் மரக்கிளைகள் மோதி கொண்டிருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் அதை சரி செய்து தருமாறு அந்த தெருவில் உள்ள பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.