கரூர் மாவட்டம்,தாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கனகபுரி வேலன் கோவிலில் இன்று கந்த சஷ்டி முதல் நாள் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இவ் வழிபாட்டில் முருகனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலையில் சூடி தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. வழிபாட்டில் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டு முருகனை மனதார வழிபாடு செய்தனர்.
செய்தியாளர் -R.சுரேஷ்