மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

21 November 2025

கரூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான கரூர் மாரியம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாரியம்மனுக்கு பல்வேறு வகையான மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து, தீபம் ஏற்றி பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். ஆர்.சுரேஷ் ,கரூர்