மீனாட்சி சுந்தரேசர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

01 December 2025

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியம் கழுகூர் கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு  நடைபெற்றது. வழிபாட்டில் நந்தி பகவானுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்,மாலைகள் சூடி தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இவ் வழிபாட்டில் பொதுமக்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை மனதார வழிபாடு செய்தனர்.


R. சுரேஷ்
கொற்றவை செய்தியாளர்,