அரவக்குறிச்சி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

25 November 2025

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட, தாளப்பட்டி  கிராமம், மலையூர் பகுதியில் உள்ள கனகபுரி வேலன் கோயிலில் இன்று சத்ரு சம்ஹார திருதசி பூஜை சிறப்பாக நடைபெற்றது. முருகனுக்கு வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து வழிபாடு செய்து, பூஜை முடிந்த பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.
R. சுரேஷ், கரூர்