கரூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமான கரூர் மாரியம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாரியம்மனுக்கு பல்வேறு வகையான மலர் மாலைகளால் அலங்காரம் செய்து தீபாராதனை செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தும், தீபம் ஏற்றி பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.