கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் அமைந்துள்ள பகுதியில் தனியார் மேலாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள் களப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் . பின்னர் மதிய உணவை சாப்பிட கோவில் அருகே அமர்திருந்தனர். அப்போது பெரிய நாயகி அம்மன் சிலை மீது நாகப்பாம்பு ஒன்று ஏரி படம் எடுத்து ஆடியது. இதைப் பார்த்த மாணவ மாணவிகள் தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாக பரவி வருகிறது.