பிளஸ் டூ பொது தேர்வு ரத்து என அறிவித்த முதலமைச்சருக்கு - தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் பாராட்டு

10 June 2021


பிளஸ் டூ பொது தேர்வு ரத்து என அறிவித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலப் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கரோனா பெருஞ்சோற்று காலத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற 30 நாளில் நடைபெற்ற வியத்தகு சாதனைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பாராட்டு கிறோம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது இணையவழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் தமிழக அரசின் மீதான நம்பிக்கையை கொடுத்துள்ளது.

 முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்கி வரும் சிறுவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கி வருவதை பாராட்டி மகிழ்கிறோம். கொரோனா தொற்று பாதிப்பு நீங்காத நிலையில் மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்தப்படாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், மருத்துவக் குழுவினர், கல்வியாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்ட பின்பே தமிழக முதல்வர் அவர்கள் இந்த முக்கிய முடிவை அறிவித்துள்ளார். இதனை வரவேற்கிறோம். 

கொரோனா பேரிடரிலிருந்து தமிழ்நாட்டை மீட்பதற்கு ஆளும்கட்சி, எதிர் கட்சி, தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்ற வேண்டும். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ள செய்தியையும் வரவேற்கிறோம். இவ்வாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

நிருபர் மீனா திருவாரூர்