ஒப்பந்த ஆசிரியரை கொலை செய்த மூன்று பேர் கைது

01 December 2025

ஜார்க்கண்ட் மாநிலம் புர்ணபணி கிராமத்தைச் சேர்ந்த முக்ரு தேவ்கம் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் ஒரு சிலருடன் இணைந்து மது அருந்தி உள்ளார். 


அப்போது அவருக்கும் மது அருந்தி கொண்டிருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் மூன்று பேரும் தேவகம்மை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து இன்று காலை கிராமத்தினருக்கு தகவல் தெரிய வரவே அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவத்தை செய்த மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்....