தென் குமரி கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவும் அல்லது கரையோர பகுதிகளுக்கு செல்லவும் கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் மழைநீர் தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்...