77 கிலோ குட்கா பறிமுதல்... ஒருவர் கைது.. கன்னியாகுமரி மாவட்ட போலீசார் நடவடிக்கை!!
02 April 2025
♻️ கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS* அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
♻️ அதன் தொடர்ச்சியாக குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் அவர்கள் மேற்பார்வையில், குளச்சல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.இசக்கிதுரை தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தண்ணீர் கேன் ஏற்றி வந்த மினி டெம்போவை சோதனை செய்தனர்.
♻️சோதனையில் கருங்கல், மேலசுண்டவிளை பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் மகன் அல்ட்ரின் தாஸ் (எ) வினு(41) என்பவர் தான் ஓட்டி வந்த மினி லாரியில் தண்ணீர் கேன்களுக்கு இடையில் பதுக்கி வைத்திருந்த 77 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்காவையும், குட்கா எடுத்து செல்ல பயன்படுத்திய மினிடெம்போவையும் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
♻️ மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
கேபி.தமிழ்வாணன்
நாகர்கோவில்