தில்லி ஆதிக்கத்திற்குத் தமிழ்நாடு தலைகுனியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

25 January 2026

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தில்லியின் ஆதிக்கத்திற்குத் தமிழ்நாடு ஒருபோதும் தலைகுனியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


மொழிப்போர் தியாகிகளின் தியாகமே தமிழர்களை இயக்கிக்கொண்டு இருப்பதாகவும், புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை வாயிலாக ஹிந்தியை எப்படியாவது திணிக்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வடமாநில மக்களை 'டபுள் என்ஜின்' அரசு என்று கூறி ஏமாற்றியது போல, விழிப்புணர்வுடன் இருக்கும் தமிழர்களை ஏமாற்ற முடியாது என்று குறிப்பிட்ட அவர், அறிஞர் அண்ணா வழியில் நின்று மாநிலத்தின் உரிமைகளையும் மொழியையும் காக்கப் போராடுவோம் எனத் தனது உரையில் வலியுறுத்தினார்.