உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு

19 December 2025

உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன்  ஆய்வு


உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கோரிக்கையை ஏற்று கழிவறை மற்றும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் உயர்கல்வியில் கடந்த ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டில் 20% மாணவ மாணவிகள் கூடுதலாக சேர்க்க நடைபெற்றதாக கூறினார்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இன்று 19.12.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது கல்லூரியில் இருந்த பதிவேடுகளை ஆய்வு செய்த அவர் கல்லூரியின் முதல்வரிடம் மாணவர்கள் வருகை குறித்தும் பேராசிரியர்கள் வகுப்பு எடுப்பது குறித்தும் கேட்டறிந்தார் தொடர்ந்து கல்லூரி வகுப்பறைகளுக்கு சென்ற அமைச்சர் மாணவ மாணவிகளிடம் கோரிக்கைகளை கேட்டிருந்தார் அப்பொழுது மாணவிகள் கழிவறை வசதி மற்றும் கேண்டின் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் அவர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் மாணவ மாணவிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக கழிவறை வசதி மற்றும் கேண்டின் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதி அளித்தார் இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அமைச்சர் தமிழகத்தில் உயர்கல்வியைப் பொறுத்தவரை கடந்த கல்வி ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டில் 20% கூடுதலாக மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கூறினார். கல்லூரிகளில் 20 சதவிகித கூடுதல் இருக்கைகள் நிரப்பப்பட்டுள்ளது தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதால் அதன் அடிப்படையில் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டது உளுந்தூர்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் இவ்வாண்டு உளுந்தூர்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி தற்காலிக பள்ளி கட்டிடத்தில் தொடங்கப்பட்டு 348 மாணவ மாணவிகள் சேர்க்கை  நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது கூடுதலாக 58 இருக்கைகள் அமைக்கப்பட்டு சேர்க்கைகள் நடைபெற்று வகுப்புகள் நடந்து வருகிறது கூடுதல் இருக்கைகளுடன் செயல்படும் முதல் கல்லூரி உளுந்தூர்பேட்டை அரசு கலைக் கல்லூரி மற்ற கல்லூரிகளுக்கும் இதே போல் தான் 64 கல்லூரிகளில் 2 ஷிப்ட் முறையில் திமுக அரசு அமைந்த பின்பு நடந்து வருகிறது திமுக அரசு அமைந்த பின்பு 34 கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அக்கறை காட்டும் முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகளை கடந்து செல்லும் நிலையில் திடீரென அடுத்த கல்வியாண்டில் லேப்டாப் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் திமுக ஆட்சி அமைந்த முதல் இரண்டு ஆண்டுகள் கொரோனா காலம் என்பதாலும் மூன்றாவது ஆண்டு கடும் வெள்ள சேதம் ஏற்பட்டதாலும் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் கொடுக்க முடியாத லேப்டாப் கொடுக்க முடியாத நிலையில் அடுத்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் ஏற்படுத்தி உள்ளார் என்று கூறினார்.‌‌ இந்த ஆய்வின் பொழுது உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு கல்லூரி முதல்வர் செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்....


இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்