டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

21 February 2026

இலங்கை பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி, பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தது. இருப்பினும், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 22) நடைபெறவுள்ள தனது முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.