சுவிட்சர்லாந்தில் பயங்கர வெடி விபத்து: 40 பேர் உயிரிழப்பு

01 January 2026

சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) நகரில் உள்ள ஒரு பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்த பாரில் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இந்த வெடி விபத்தினால் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும் இந்த வெடி விபத்து எதனால் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....