கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் பவித்ரன், பள்ளியாடி ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டார். தகவலின்பேரில் ரயில்வே போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரரை நினைத்து மனமுடைந்த பவித்ரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.