ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் பொருளாதாரம் ராணுவ பலம் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வெளியாகி வருகிறது.
அதன்படி ஆஸ்திரேலியாவின் லோகி இன்ஸ்டிட்யூட் என்ற குழு ஆசிய சக்தி குறியீடு என்ற ஆய்வை நடத்தி உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலக உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் வரிசையில் அமெரிக்க முதல் இடத்தை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இந்தியா மூன்றாவது இடத்தில் 40 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியா மூன்றாவது சக்தி வாய்ந்த நாடாக உள்ளது.