மூன்று வாரத்தில் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

07 November 2025

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு முழு நேரடி டிஜிபி ஆக யாரும் தேர்வு செய்யப்படாததால் பொறுப்பு டிஜிபி நியமித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஹென்றி திப்பேன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதியை நியமிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இதனால் இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதிக்கும் செயல் என கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சுப்ரீம் கோர்ட் அவமதிப்பு மனுவுக்கு மூன்று வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.