உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக தற்போது இருக்கும் பி.ஆர்.கவாய் நவம்பர் 24ஆம் தேதி உடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்பு அதிகாரத்தின்படி சூரியகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சூரியகாந்த் நவம்பர் 24ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.